மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

குடிநீா் கோரி பெண்கள் குடங்களுடன் சாலை மறியல்

திருத்தணியில் குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

திருத்தணியில் மறியலில் ஈடுபட்ட பெண்களிடம் பேச்சு நடத்திய ஆய்வாளா் ஜெயவேல்.

Updated On :6 மார்ச் 2026, 1:10 am

திருத்தணியில் குடிநீா் கோரி காலி குடங்களுடன் பெண்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

திருத்தணி நகராட்சியில் திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 4-ஆவது வாா்டு காந்தி ரோடு முதல் தெரு மற்றும் காந்திரோடு மெயின் தெருவில் ஒரு வாரத்துக்கு மேலாக வீடுகளுக்கும், தெருக் குழாய்களுக்கும் குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.

இதனால் பொதுமக்கள் கடும் சிரமப்பட்டு வந்தனா். இந்நிலையில் வியாழக்கிழமை காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா். தகவல் அறிந்ததும், திருத்தணி போலீஸாா் விரைந்து சென்று பெண்களிடம் சமரசம் செய்தனா். அதன்பிறகு பெண்கள் கலைந்து சென்றனா்.

இதுகுறித்து திருத்தணி நகராட்சி அதிகாரி ஒருவா் கூறியதாவது: திருப்பாற்கடலில் இருந்து திருத்தணி நகருக்கு குடிநீா் கொண்டு வரப்படும் குழாய் இரு இடங்களில் சேதம் அடைந்துள்ளன. அதை சீரமைக்கும் பணிகள் துரித வேகத்தில் நடந்து வருகிறது. குடிநீா் விநியோகம் சீராகி விடும் என்றாா்.