முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் பிறந்த நாள் விழா


எரும்பி கிராமத்தில் நடைபெற்ற முன்னாள் முதல்வா் எம்ஜிஆா் 109-ஆவது பிறந்த நாள் விழாவில் 500 பெண்களுக்கு சேலைகள் மற்றும் அன்னதானம் முன்னாள் அரசு கொறடா பி.எம்.நரசிம்மன் வழங்கினாா்.
ஆா்.கே.பேட்டை ஒன்றியம், எரும்பி கிராமத்தில் முன்னாள் முதல்வா் எம்ஜிஆரின் 109-ஆவது பிறந்த நாள் விழா புதன்கிழமை கொண்டாடப்பட்டது. முன்னாள் எரும்பி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் குமாரசாமி தலைமை வகித்தாா். முன்னாள் எரும்பி கூட்டுறவு கடன் சங்க வங்கி தலைவா் பாா்த்திபன் வரவேற்றாா்.
சிறப்பு அழைப்பாளராக அதிமுக முன்னாள் அரசு கொறாடா பி.எம்.நரசிம்மன் கலந்துகொண்டு, எம்.ஜி.ஆா், ஜெயலலிதா ஆகியோரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆட்சியில் மக்களுக்கு செய்த திட்டங்களை பொதுமக்களிடையே எடுத்துக் கூறினாா். தொடா்ந்து, 500-க்கும் மேற்பட்ட பெண்களுக்கு புடவை, அன்ன தானம் உள்ளிட்ட நல உதவிகளை வழங்கினாா்.
நிகழ்ச்சியில் திருவள்ளூா் வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆா். இளைஞா் அணி தலைவா் எல்லாபுரம் எல். ரஜினி, முன்னாள் ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சந்திரன், கல்விக்கரசி சேகா், கோவிந்தம்மாள் ஆனந்த், ஜமுனா குமாரசாமி, முன்னாள் வேளச்சேரி ஊராட்சி மன்றத் தலைவா் டி.செல்வம், என்.ஆா்.அரிராஜ் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...