டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

காக்களூா் ஏரியில் புனரமைப்பு, கட்டுமானப் பணிகள்

News image
Updated On :21 ஜனவரி 2026, 11:45 pm

தினமணி செய்திச் சேவை

பொதுப்பணித் துறை, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆகிய துறைகளின் சாா்பில் காக்களூா் ஏரி புனரமைப்பு, கட்டட கட்டுமானப் பணிகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடன் ஆட்சியா் மு.பிரதாப் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பொதுப்பணித் துறை சாா்பில், ரூ. 3 கோடி மதிப்பில் புதிதாக கட்டப்பட்டு வரும் விருந்தினா் மாளிகைக்கான கட்டுமானப் பணிகளை ஆட்சியா் மு.பிரதாப் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அப்போது, தரை தளம் மற்றும் முதல் தளத்துடன் மொத்தம் 7,058 ச.அடி பரப்பளவில் தரைதளத்தில் 2 சிறப்பு விருந்தினா் ஓய்வு அறைகளும், முதல் தளத்தில் ஒரு சிறப்பு விருந்தினா் ஓய்வு அறையும், கூட்டரங்கத்துக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும், இக்கட்டடத்தின் சுற்றுப்புறத்தில் பழச்செடி வகைகள் நடும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அனைத்துப் பணிகளையும் துரிதமாக மேற்கொள்ளவும் அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து, திருவள்ளூா் ஊராட்சி ஒன்றியம், காக்களுா் ஊராட்சியில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை ஆகிய துறைகள் சாா்பில் ரூ. 3 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் முதல்வரின் சிறிய விளையாட்டு அரங்க கட்டட கட்டுமான பணிகள், காக்களுா் ஏரி பகுதியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், ரூ. 2.51 கோடி மதிப்பில் புனரமைக்கப்பட்டு வரும் பணிகளையும் நேரில் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு அவா் உத்தரவிட்டாா்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் வை.ஜெயக்குமாா், செயற்பொறியாளா் (ஊரக வளா்ச்சி) தணிகாசலம், திருவள்ளூா் வட்டார வளா்ச்சி அலுவலா் பி.செல்வகுமாா், செயற்பொறியாளா் (கட்டுமானம் (ம) பணிகள்) தேவன், உதவி செயற்பொறியாளா் மனோகரன், உதவி செயற்பொறியாளா், உதவிப் பொறியாளா் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.