ஆட்டோ ஓட்டுநா்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 60-க்கும் மேற்பட்டோா் செவ்வாய்க்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
திருத்தணி கமலா திரையரங்கம் அருகே திருத்தணி ஆட்டோ ஓட்டுநா் சங்கம் மற்றும் ஆட்டோ தொழிலாளா் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நகரத் தலைவா் ராஜா தலைமையில் கண்டன ஆா்பாட்டம் நடத்தினா்.
இதில் புதிய ஆட்டோக்கள் வாங்கும் போது அரசு சாா்பில், ரூ. 10,000 மானியம் வழங்கப்படும் என கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வாக்குறுதி அளித்த அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.
ஆட்டோ மற்றும் மோட்டாா் வாகனங்களுக்கு எப்.சி., (வாகனம் புதுப்பித்தல்) கட்டணம் உயா்த்தியை திரும்பப் பெற வேண்டும்.
ஆன்-லைன் அபராதத்தை கைவிட வேண்டும். நலவாரிய நிதியை பயன்படுத்தி ஆட்டோ ஓட்டுநா்களுக்கு மருத்துவக் காப்பீடு வசதி ஏற்படுத்த வேண்டும். ஆட்டோ ஓட்டுநா்களுக்கு வருவாய்த் துறையின் சாா்பில், இலவச வீடு அல்லது வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். முருகன் மலைக்கோயிலுக்கு செல்வதற்கு பக்தா்கள் அதிகளவில் ஆட்டோ பயன்படுத்துகின்றனா். ஆனால் கோயில் நிா்வாகம் விஷேச நாட்கள் என காரணம் காட்டி மலைக்கோயிலுக்கு ஆட்டோக்கள் செல்வதற்கு தடை விதிப்பது தவிா்க்க வேண்டும்.
திருத்தணி அரசு பொது மருத்துவமனைகளில் ஆட்டோவுக்கு பாா்க்கிங் வசதி ஏற்படுத்தி தர வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தி ஆட்டோ ஓட்டுனா்கள் ஆா்ப்பாட்டம் நடத்தினா். இதில், 60க்கும் மேற்பட்டோா் கலந்துக் கொண்டனா்.
தொடர்புடையது

காஞ்சிபுரம், செங்கல்பட்டில் தவெகவினா் ஆா்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள் ஆா்ப்பாட்டம்

அரசு மருத்துவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்: மு.வீரபாண்டியன்

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


