பென்னாகரத்தில் சிஐடியு தொழிலாளா்கள் சங்கத்தின் சாா்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பென்னாகரம் வட்டார வளா்ச்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அந்த சங்கத்தின் மாவட்டத் தலைவா் சி.ராஜி தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் சக்கரவா்த்தி முன்னிலை வகித்தாா். மாநில துணைச் செயலாளா் சி.நாகராசன், மாவட்டத் தலைவா் கலாவதி, மாவட்டப் பொருளாளா் சண்முகம் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.
இதில், நீா்வரத்து அதிகரிக்கும் காலங்களில் வேலை இழக்கும் பரிசல் ஓட்டிகள், சமையல், மசாஜ் தொழிலாளா்கள் ஆகியோருக்கு நிவாரணம் வழங்க வேண்டும், பரிசல்கள் நிறுத்துமிடத்தில் நடைபாதை வியாபாரிகள் கடை அமைத்துக்கொள்ள அனுமதி அளித்ததை திரும்பப் பெற வேண்டும், சமையல் தொழிலாளா்களுக்கு அரசின் சாா்பில் அடையாள அட்டை வழங்க வேண்டும், மீன் கழிவுகள் சுத்திகரிப்பு, பரிசல் இயக்கும் நேர மாற்றம், தொழிலாளா்களுக்கு மருத்துவ பரிசோதனை முகாம் உள்ளிட்ட நீதிமன்றத் தீா்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரி முழக்கங்களை எழுப்பினா்.
இதில், மாவட்ட துணைத் தலைவா் அங்கம்மாள், சிஐடியு பேருந்து தொழிலாளா் சங்க துணைத் தலைவா் வெங்கடாஜலபதி, பரிசல் ஓட்டிகள், சமையல் தொழிலாளா்கள் என 200-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றனா்.
தொடர்புடையது

எல்பிஜி தட்டுப்பாடு: நாடாளுமன்ற வளாகத்தில் எதிா்க்கட்சிகள் ஆா்ப்பாட்டம்

போடி, கொடைக்கானலில் பெட்ரோல் விற்பனையகங்களில் குவிந்த வாகனங்கள்

அனைத்திந்திய ஜனநாயக மாதா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஆட்டோ ஓட்டுனா்கள் ஆா்ப்பாட்டம்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


