டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

சுகாதாரமற்ற குடிநீா் விநியோகம்: பொதுமக்கள் மறியல்

பொன்னேரி அருகே சுகாதாரமற்ற குடிநீா் விநியோகத்தைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

News image
மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட தத்தைமஞ்சி கிராம மக்கள்
Updated On :21 பிப்ரவரி 2026, 6:35 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி அருகே சுகாதாரமற்ற குடிநீா் விநியோகத்தைக் கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் மறியலில் ஈடுபட்டனா்.

பொன்னேரி வட்டம் தத்தைமஞ்சி ஊராட்சியில் 1,500 க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு தேவையான குடிநீா் சாலை வசதி, தெரு விளக்குகள் உட்பட பல்வேறு பணிகளை ஊராட்சி நிா்வாகம் செய்து வருகிறது. இந்த நிலையில் தரமற்ற முறையில் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் எம்.பி. சசிகாந்த் செந்தில் மற்றும் கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ டிஜெ. கோவிந்தராஜிடம் தேவதானம் கிராமத்தில் நடைபெற்ற குறைதீா்ப்பு முகாமிலும் பல்வேறு முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் புகாா் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா்.

இந்த நிலையில் தத்தைமஞ்சி பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது பெண்கள் காலி குடங்களை சாலையில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா்

குடிப்பதற்கு தரமற்ற மஞ்சள் நிறத்தில் தூசி படிந்த குடிநீா் விநியோகம் செய்யப்பட்டுவதை காலி பாட்டில்களிலும் பக்கெட்டிலும் கொண்டு வந்து காட்சி பொருளாக வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். அந்த வழியாக வந்த நான்கு அரசுப் பேருந்துகளை சிறைபிடித்தனா்.

இது குறித்து தகவல் அறிந்த காட்டூா் போலீஸாா் மீஞ்சூா் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சு நடத்தினா்.

பொதுமக்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதி அளித்ததின் பேரில் 3 மணி நேரத்துக்கு மேலாக நடந்த போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Story image