/

திருவள்ளூா்: குறைதீா் கூட்டத்தில் 676 மனுக்கள் அளிப்பு

திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 676 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ்

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:30 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூா்: திருவள்ளூரில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் மொத்தம் 676 மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ் பெற்றுக் கொண்டாா்.

மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாக கூட்டரங்கத்தில் குறை தீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலா் ச.சுரேஷ் தலைமை வகித்தாா். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் இருந்து மொத்தம் 676 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன.

மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியான பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்க துறை அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) பாலமுருகன், உதவி ஆணையா் (கலால்) கணேசன், பயிற்சி ஆட்சியா் அப்துல் ரஷீது, துணை ஆட்சியா் (பயிற்சி) செ.சண்முக ப்ரீத்தா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.