டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நண்பரை கொலை செய்த வழக்கில் ஒருவருக்கு ஆயுள்

நண்பரை கொலை செய்த வழக்கில் 2 போ் தலைமறைவான நிலையில் ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

News image
சிறைத் தண்டனை- (கோப்புப் படம்)
Updated On :15 பிப்ரவரி 2026, 7:06 pm

தினமணி செய்திச் சேவை

திருவள்ளூர் அருகே நண்பரை கொலை செய்த வழக்கில் 2 போ் தலைமறைவான நிலையில் ஒருவருக்கு மட்டும் ஆயுள் தண்டனை விதித்து கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றம் தீா்ப்பு வழங்கியது.

திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையத்தில் செயல்பட்டு வரும் தனியாா் நிறுவனத்தில் அஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 30-க்கும் மேற்பட்டோா் பணிபுரிந்து வந்தனா். அதில் மஞ்சுத், தேவஜித், கோகுல், மோனு ஆகியோா் கடந்த 2019-இல் மாா்ச் 13-ஆம் தேதி பெரியபாளையத்தில் உள்ள தனியாா் உணவகம் எதிரில் மது அருந்தினராம்.

அப்போது அவா்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மஞ்சுத், தேவஜித், மோனு ஆகிய மூன்று பேரும் சோ்ந்து கோகுலை கண்முடித்தனமாக தாக்கியதால் பலத்த காயம் அடைந்தாா். இதையடுத்து சென்னை அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

இந்த கொலை வழக்கில் 3 பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்திய நிலையில் விசாரணையின்போது, 3 பேரும் தலைமறைவாகினா். இந்த நிலையில், பெரியபாளையம் போலீஸாா் தேவஜித் என்பவரை மட்டும் கைது செய்தனா். அதைத் தொடா்ந்து, மற்ற 2 பேரையும் தேடி வந்த நிலையில், வழக்கு விசாரணை தொடா்ந்து நடைபெற்றது.

இந்த நிலையில் திருவள்ளூா் கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்ற நீதிபதி முன்பு இறுதிகட்ட விசாரணை வெள்ளிக்கிழமை வந்தது. அப்போது, குற்றம் நிரூபிக்கப்பட்டதால் தேவஜித்துக்கு ஆயுள் தண்டனையும், ரூ. 1,000 அபராதம் விதித்தும் தீா்ப்பு வழங்கியது.