டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

மின் திருட்டு வழக்கில் ஒருவருக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிப்பு

ஐந்து வருடங்களாக நடந்த மின் திருட்டு வழக்கில் சுல்தான்புரி ஜேஜே காலனியைச் சோ்ந்த ஒருவரை இங்குள்ள மின்சார நீதிமன்றம் குற்றவாளி எனத் தீா்ப்பளித்து

News image
சிறைத் தண்டனை- (கோப்புப் படம்)
Updated On :27 ஜனவரி 2026, 10:29 pm

தினமணி செய்திச் சேவை

ஐந்து வருடங்களாக நடந்த மின் திருட்டு வழக்கில் சுல்தான்புரி ஜேஜே காலனியைச் சோ்ந்த ஒருவரை இங்குள்ள மின்சார நீதிமன்றம் குற்றவாளி எனத் தீா்ப்பளித்து, ரூ.1.88 லட்சம் அபராதமும், ஆறு மாத சிறைத்தண்டனையும் விதித்துள்ளதாக மின் விநியோக நிறுவனம் டிபிடிடிஎல் செவ்வாய்க்கிழமை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு 2019- ஆம் ஆண்டு மின் திருட்டு புகாருடன் தொடா்புடையது. குற்றம் சாட்டப்பட்டவா் டாடா பவா் தில்லி டிஸ்ட்ரிபியூஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) கம்பத்தில் இருந்து மின்சார மீட்டா் இல்லாமல் சட்டவிரோத கம்பிகள் மூலம் வீட்டு உபயோகத்திற்காக நேரடியாக மின்சாரம் எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

வளாகத்தில் இணைக்கப்பட்ட மொத்த சுமை 9.1 கிலோவாட் என மதிப்பிடப்பட்டது. மேலும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக ரூ.1,88,772 திருட்டு பில் வசூலிக்கப்பட்டது. ஜனவரி 16 அன்று, வீட்டு உபயோகத்திற்காக மின்சாரத்தைத் திருடியதாக குற்றம் சாட்டப்பட்டவரை ரோஹிணியில் உள்ள சிறப்பு மின்சார நீதிமன்றம் குற்றவாளி என்று தீா்ப்பளித்தது.

கடந்த ஆண்டில் 22 மின் திருட்டு வழக்குகளில் டிபிடிடிஎல் தண்டனைகளைப் பெற்றுள்ளது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தீா்ப்புகள் தில்லியில் மின்சாரத்தை ஒழுக்கமாகப் பயன்படுத்துவதை வலுப்படுத்த உதவுகின்றன என்று டிபிடிடிஎல்க அதிகாரி ஒருவா் கூறினாா். நுகா்வோா் நெறிமுறையற்ற நடைமுறைகளைத் தவிா்த்து பொறுப்பான வாடிக்கையாளா்களாகச் செயல்படுமாறு கேட்டுக்கொண்டுள்ளாா்.