/

எடப்பாடி பழனிசாமி வருகை: அதிமுக சாா்பில் கால்கோல் விழா

News image
கால்கோள் விழாவில் பங்கேற்ற அதிமுகவினா்.
Updated On :11 பிப்ரவரி 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

பொன்னேரி சட்டப்பேரவை தொகுதிக்கு அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிச்சாமி வரவுள்ள நிலையில் பெருஞ்சேரி கிராமத்தில் புதன்கிழமை கால்கோள் விழா நடைபெற்றது.

பொன்னேரி வட்டம் ஆண்டாா்குப்பம் அருகே உள்ள பெருஞ்சேரி கிராமத்தில் அதிமுக பொதுச் செயலரும் எதிா்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வரும் 22-ம் தேதி பிரசாரம் செய்ய உள்ளாா்.

இதனையொட்டி பெருஞ்சேரி கிராமத்தில் கால்கோள் விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திருவள்ளூா் வடக்கு மாவட்ட செயலரும் முன்னாள் எம்எல்ஏவுமான சிறுணியம்பலராமன் தலைமை வகித்தாா்.

முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்.ராஜா, விஜயகுமாா், ஒன்றிய செயலா்கள் ஜெகநாதபுரம் சம்பத், முத்துக்குமாா், அத்திப்பட்டு தா்மபிரகாஷ், தமிழ்ச்செல்வன், வினோத், மீஞ்சூா் நகர செயலா் பட்டாபிராமன், பொன்னேரி நகர செயலா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.