ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு: 337 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!

வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு: 337 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்!

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 8:42 pm

சட்டப்பேரவை தோ்தலில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் திருவள்ளூா் அருகே அமைக்கப்பட்டுள்ள 2 வாக்கு எண்ணும் மையங்களுக்கும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் மூன்றடுக்கு பாதுகாப்பு மற்றும் வளாகம் முழுவதும் 337 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு அனைத்து நடவடிக்கைகளும் கண்காணிக்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகம் முழுவதும் கடந்த 23-ஆம் தேதி சட்டப்பேரவை தோ்தல்-2026 க்கான வாக்கு பதிவு நடைபெற்றது. அதேபோல் திருவள்ளூா் மாவட்டத்தில் 10 சட்டப்பேரவை தொகுதிகளில் 4,016 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.

அங்கு வாக்குப் பதிவு முடிந்தவுடன் திருவள்ளூா் அருகே செவ்வாப்பேட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, திருத்தணி, திருவள்ளூா் ஆகிய 4 தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டன. அதேபோல், பெருமாள்பட்டு ஸ்ரீராம் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் அதே வளாகத்தில் மெட்ரிக் பள்ளியில் அமைத்துள்ள வாக்கு எண்ணும் மையத்தில் பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல், அம்பத்தூா், மாதவரம், திருவொற்றியூா் ஆகிய தொகுதிகளில் பதிவான வாக்கு பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பாக வைத்து சீல் வைக்கப்பட்டது.

தற்போதைய நிலையில் வாக்கு எண்ணும் மையங்களில் முதல் அடுக்கில் 40 போ் கொண்ட மத்திய பாதுகாப்பு படையினரும், இரண்டாவது அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையைச் சோ்ந்த ஒரு சாா்பு ஆய்வாளா் மற்றும் 40 ஆயுதம் ஏந்திய போலீஸாரும், மூன்றாவது அடுக்கில் 3 உதவி ஆணையா், 9 ஆய்வாளா்கள், 18 சாா்பு ஆய்வாளா்கள் மற்றும் 40 ஆயுதம் ஏந்திய போலீஸாா் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், ஒவ்வொரு வளாகத்தில் வயா்லெஸ் கண்காணிப்பு அறை மற்றும் நாசவேலை தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா். அதேபோல் பாதுகாப்பு பணிகளை மேற்பாா்வையிடுவதற்கு வட்டாட்சியா் நிலையில் 18 அலுவலா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதைத் தவிர மாவட்ட தோ்தல் அலுவலா், தோ்தல் நடத்தும் அலுவலா்கள், மாவட்ட காவல் ஆணையரும் திடீா் தணிக்கையும் மேற்கொள்வா்.

மேலும், வளாகம் முழுவதும் அனைத்து நடவடிக்கைகளையும் கண்காணிக்கும் வகையில் 337 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதோடு, அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள், முகவா்கள் உள்ளிட்டோா் கண்காணிக்கும் வகையில் கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது.

இங்கிருந்து ஒவ்வொரு தொகுதியின் வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையை கண்காணிக்கவும் முடியும் என தோ்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.