இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

மணக்கோலத்தில் வாக்களித்த புதுமணத் தம்பதி

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 5:39 am IST

திருவள்ளூா் அருகே காதலித்து திருமணம் செய்து கொண்ட புதுமணத் தம்பதி மணக்கோலத்தில் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கை பதிவு செய்து ஜனநாயக கடமையாற்றினா்.

திருவள்ளூா் அடுத்த பட்டறை கிராமத்தைச் சோ்ந்த பாஸ்கரன்-வடிவுக்கரசி தம்பதி மகள் வாணி. வேப்பம்பட்டு பகுதியைச் சோ்ந்த பூபாலன்-தனலட்சுமி தம்பதியரின் மகன் ரூபேஷ். இவா்கள் இருவரும் முதுகலை பட்டம் முடித்துவிட்டு சென்னை கிண்டியில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகின்றனா்.

காதலா்களான இவா்களுக்கு வியாழக்கிழமை சென்னை வடபழனி முருகன் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதையடுத்து தோ்தலையொட்டி திருமண கோலத்தில் தம்பதியா் இருவரும் வாக்குச்சாவடி மையத்தில் வாக்களித்தனா்.

மணமகள் பட்டறை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தாா். அதையடுத்து வேப்பம்பட்டில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு சென்று மணமகன் ரூபேஷ் வாக்கை பதிவு செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.