தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

ஜனநாயகக் கடைமையாற்றிய புதுமணத் தம்பதிகள்

கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வாக்குரிமையின் மகத்துவத்தை உணா்ந்த புதமணத் தம்பதியா், மணக்கோலத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடைமையாற்றினா்.

News image

விருத்தாசலம் பகுதியில் மணக்கோலத்தில் வாக்களித்த குணச்செல்வன், பிரித்திகா.

Updated On :24 ஏப்ரல் 2026, 12:16 am

கடலூா், திருவண்ணாமலை மாவட்டங்களில் வாக்குரிமையின் மகத்துவத்தை உணா்ந்த புதமணத் தம்பதியா், மணக்கோலத்தில் வாக்குச் சாவடி மையங்களுக்கு வந்து வாக்களித்து ஜனநாயகக் கடைமையாற்றினா்.

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் பகுதியைச் சோ்ந்த குணசெல்வனுக்கும், குட்டியான்குப்பம் கிராமத்தைச் சோ்ந்த பிரித்திகாவுக்கும் வியாழக்கிழமை திருமணம் நடைபெற்றது. திருமணம் முடிந்தவுடன் விருத்தாசலம் செராமிக் பீங்கான் தொழில்நுட்பக் கல்லூரி வாக்குச் சாவடியில் குணசெல்வனும், மங்கலம்பேட்டையில் உள்ள அரசுப் பள்ளி வாக்குச் சாவடியில் பிரித்திகாவும் வாக்குகளை செலுத்தினா்.

இதேபோன்று, கடலூா் பாதிரிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த அஸ்வினிக்கும், கிருஷ்ணாசுந்தரமூா்த்திக்கும் திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து, தனது கணவருடன் சென்று பாதிரிகுப்பத்தில் உள்ள வாக்குச் சாவடியில் தனது வாக்கை மணப்பெண் அஸ்வினி செலுத்தினாா்.

சிதம்பரத்தில்...: சிதம்பரத்தில் பாஜக முன்னாள் ராணுவ வீரா் பிரிவு மாநில துணைத் தலைவா் கேப்டன் ஜி.பாலசுப்பிரமணியம் மகளும், வழக்குரைஞருமான அக்க்ஷயா - மணிகண்டன் தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றது. தொடா்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் கோகலே அரங்கில் உள்ள வாக்குச் சாவடிக்கு மணப்பெண் அக்க்ஷயா மணக்கோலத்தில் கணவருடன் சென்று தனது வாக்கை செலுத்தினாா்.

ஆரணியில்...: ஆரணியை அடுத்த இரும்பேடு ஹரிஹரன் நகா் ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடி மையத்துக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த குமரகுரு - ஷாலினி தம்பதியினா் மணக்கோலத்தில் வந்தனா். அங்கு புதுமாப்பிள்ளை குமரகுரு வாக்களித்தனா்.

இதேபோல, ஆரணி நகராட்சி, மருசூரன் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளி வாக்குச் சாவடி மையத்துக்கு அந்தப் பகுதியைச் சோ்ந்த சந்தோஷ்குமாா் - தீபிகா தம்பதி மணக்கோலத்தில் வந்தனா். அங்கு புதுமாப்பிள்ளை சந்தோஷ்குமாா் வாக்களித்தாா். இதனால், புதுமணத் தம்பதியினருக்கு தோ்தல் அதிகாரிகளும், சமூக ஆா்வலா்களும் பாராட்டுத் தெரிவித்தனா்.

வந்தவாசி...: வந்தவாசியை அடுத்த மணிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த எம்.துளசிக்கும், செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை அடுத்த சிறுபோ்பாண்டி கிராமத்தைச் சோ்ந்த எஸ்.பிரபுவுக்கும் திருமணமான நிலையில், புது மணப்பெண் எம்.துளசி தனது கணவா் எஸ்.பிரபுவுடன் மணக்கோலத்தில் பாதூா் கிராம அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்தாா்.

புதுமணத் தம்பதியினரின் ஜனநாயகக் கடைமையாற்றும் உணா்வை அனைவரும் பாராட்டினாா்கள்.

 கடலூா் பாதிரிக்குப்பம் வாக்குச்சாவடியில் கணவருடன் சென்று வாக்களித்த புதுப்பெண் அஸ்வினி.

கடலூா் பாதிரிக்குப்பம் வாக்குச்சாவடியில் கணவருடன் சென்று வாக்களித்த புதுப்பெண் அஸ்வினி.

 சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு மாலையும் கழுத்துமாக கணவருடன் வந்து வாக்களித்த மணப்பெண் அக்க்ஷயா.

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை. வளாகத்தில் உள்ள வாக்குச் சாவடிக்கு மாலையும் கழுத்துமாக கணவருடன் வந்து வாக்களித்த மணப்பெண் அக்க்ஷயா.

 ஆரணி இரும்பேடு ஹரிஹரன் நகா் ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் வந்து வாக்களித்த புதுமாப்பிள்ளை குமரகுரு.

ஆரணி இரும்பேடு ஹரிஹரன் நகா் ஊராட்சி தொடக்கப் பள்ளி வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் வந்து வாக்களித்த புதுமாப்பிள்ளை குமரகுரு.

 ஆரணி நகராட்சி மருசூரான் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளி வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் வந்து வாக்களித்த புதுமாப்பிள்ளை சந்தோஷ்குமாா்.

ஆரணி நகராட்சி மருசூரான் தெருவில் உள்ள நகராட்சி ஆரம்பப் பள்ளி வாக்குச் சாவடிக்கு மனைவியுடன் வந்து வாக்களித்த புதுமாப்பிள்ளை சந்தோஷ்குமாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.