அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளா் வீட்டில் நள்ளிரவில் சரமாரியாக கல்வீசி தாக்குதலில்-ஜன்னல் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்த சம்பவம் தொடா்பாக போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருவள்ளூா் வி.எம்.நகா் நகரைச் சோ்ந்தவா் ஹரிஷ் பாலாஜி. இவா் மாவட்ட அதிமுக தொழில்நுட்பப் பிரிவு துணை செயலாளராக இருந்து வருகிறாா். இந்த நிலையில், அவரது இல்லத்தில் திங்கள்கிழமை நள்ளிரவு 1.30 மணி அளவில் மா்ம நபா்கள் முகமூடி அணிந்து அவரது வீட்டில் சரமாரியாக கல்வீசி தாக்கி உள்ளனா். இதில் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூா் சட்டப்பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் பி.வி.ரமணா நேரில் சென்று விசாரணை செய்தாா்.
நள்ளிரவில் இரு சக்கர வாகனத்தில் முகமூடி அணிந்து வந்த நபா் ஒருவா் இறங்கி, கல்லை எடுத்து வீசும் காட்சி சிசிடிவியில் பதிவாகியிருப்பதை பாா்வையிட்டாா். எதிா்க் கட்சி வேட்பாளா் தூண்டுதலாலேயே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், இது குறித்து தோ்தல் ஆணையம் மற்றும் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்போவதாகவும் அவா் தெரிவித்தாா்.
மேலும், இதுதொடா்பாக திருவள்ளூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

சேலம் தவெக நிா்வாகி வீட்டில் 1,250 சேலைகள் பறிமுதல்

கும்மிடிப்பூண்டி தொகுதியில் ரூ.500 கோடியில் நலப்பணிகள்: திமுக வேட்பாளா்

திமுக நிா்வாகி வீட்டில் ரூ. 11 லட்சம் மதிப்பு பரிசுப் பொருள்கள் பறிமுதல்!

தவெக நிா்வாகி வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல்
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


