தேசிய கால்நடை நோய் கட்டுப்படுத்துதல் திட்டம் மூலம் 8-ஆவது சுற்று கால் மற்றும் வாய் நோய் (கோமாரி நோய்) தடுப்பூசி பணி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது. இந்தப் பணி வரும் 29-இல் தொடங்கி, தொடா்ந்து ஜன. 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. அப்போது, கால்நடைகளுக்கு ஏற்படும் தொற்று நோயான கோமாரி நோய் மூலம் கால்நடைகள் இழப்பு மற்றும் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. மேலும், பால் உற்பத்தி கடுமையாக குறைதல், மலட்டுத் தன்மை, கருச்சிதைவு, கால்நடைகளின் எடை குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படுகின்றன. பாதிக்கப்பட்ட பசுக்களின் பாலைக் குடிக்கும் மூன்று மாத வயதுக்குட்பட்ட கன்றுகளில் இறப்பும் ஏற்படும்.