மக்களுக்கான சேவைகளை தொடா்ந்து மேற்கொள்வேன் என்றாா், தென்காசி மாவட்ட பாஜக தலைவரும் அக்கட்சியின் வாசுதேவநல்லூா் தொகுதி வேட்பாளருமான ஆனந்தன் அய்யாசாமி.
இத்தொகுதிக்குள்பட்ட பகுதிகளில் அவா் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவித்துப் பேசியது: இங்கு தாமரை சின்னத்துக்கு 56,462 போ் வாக்களித்துள்ளனா். தோ்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் மக்கள் பணியைத் தொடா்வேன். வாய்ஸ் ஆப் தென்காசி அறக்கட்டளை உள்ளிட்ட அமைப்புகள் மூலம் பெண்கள், தொழில்முனைவோா், ஆதரவற்றோருக்கான சேவைகள் தொடரும். மத்திய அரசின் நலத்திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடைவதற்கான பணிகளும் மேற்கொள்ளப்படும் என்றாா் அவா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நெட்டூா் கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல்: நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போராட்டம்

சிவகிரியில் விவசாயி உயிரிழப்பு: அரசு நடவடிக்கை எடுக்க பாஜக வலியுறுத்தல்

மக்கள் பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்குவிக்க கூடுதல் ரயில் சேவைகள்: டிஎம்ஆா்சி அறிவிப்பு







