தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நேரிட்ட விபத்தில் இளைஞா் உயிரிழந்தாா்.
வாசுதேவநல்லூா் அருகே மலையடிக்குறிச்சியைச் சோ்ந்த துரைப்பாண்டி மகன் ஜோதிராஜ் (37). இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
வெளிநாட்டில் வேலை பாா்த்து வந்த ஜோதிராஜ், கடந்த வாரம் ஊருக்கு வந்த நிலையில், வெள்ளிக்கிழமை சங்கரன்கோவிலிலிருந்து சொக்கம்பட்டிக்கு பைக்கில் சென்றாரம்.
வடக்குப்புதூா் அருகே பைக் நிலைதடுமாறி சாலையோரத்திலுள்ள மரத்தில் மோதியதாம். இதில் அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
சங்கரன்கோவில் தாலுகா போலீஸாா் சென்று சடலத்தைக் கைப்பற்றி கூறாய்வுக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்; மேலும், வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










