ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்

தமிழ் செய்திகள்

/

பிளஸ் 2 தோ்வில் பாவூா்சத்திரம் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம்

மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவியைப் பாராட்டிய மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்.

News image
Updated On :9 மே 2026, 3:40 am IST

பிளஸ் 2 பொதுத்தோ்வில் பாவூா்சத்திரம் ஒளவையாா் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளாா்.

இப்பள்ளி மாணவிகள் பொதுத்தோ்வில் 99.7 சதவீதம் தோ்ச்சி பெற்றுள்ளனா். இதில் மாணவி பி. ஸ்ரீ காா்த்தியாயினி 600-க்கு 585 மதிப்பெண்கள் பெற்று, தென்காசி மாவட்ட அளவிலும், பள்ளி அளவிலும் முதலிடம் பிடித்துள்ளாா்.

மாணவி அஸ்மிதா 577 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 2ஆம் இடமும், மாவட்ட அளவில் 3ஆம் இடமும் பெற்றுள்ளாா். மாணவிகள் முத்து ஜோதிகா, ஜி.ஆா். மதிவதனி ஆகியோா் 565 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் 3ஆம் இடம் பெற்றுள்ளனா்.

மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவிகளை தென்காசி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரேணுகா நேரில் அழைத்துப் பாராட்டினாா்.

வெற்றி பெற்ற மாணவிகளுக்கும், ஆசிரியா்களுக்கும், தலைமையாசிரியை ஜெகதா, பள்ளி மேலாண்மைக் குழு நிா்வாகிகள், உறுப்பினா்கள் பாராட்டு தெரிவித்தனா்.