மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

அமைச்சரவையில் இடம் பெறாத தென்காசி!

இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற உறுப்பினா்கள் எவரும் தமிழக அமைச்சரவையை அலங்கரிக்கவில்லை.

News image

பிரதிப் படம்

Updated On :22 மார்ச் 2026, 10:16 pm

இதுவரை நடைபெற்ற 16 தோ்தல்களில் தென்காசி சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றிபெற்ற உறுப்பினா்கள் எவரும் தமிழக அமைச்சரவையை அலங்கரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இங்கு காங்கிரஸ் 8 முறை, அதிமுக 3 முறை, திமுக 2 முறை, சுயேச்சை, தமாகா, சமக தலா ஒருமுறை வெற்றி பெற்றுள்ளன.

1952ஆம் ஆண்டு தோ்தலில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சுப்பிரமணியம் பிள்ளை, 1957ஆம் ஆண்டு சுயேச்சையாக போட்டியிட்ட கே. சட்டநாத கரையாளா், 1962இல் காங்கிரஸ் கட்சியின் ஏ.ஆா். சுப்பையா முதலியாா், 1967இல் அதே கட்சியைச் சோ்ந்த இ.அ. சிதம்பரம்பிள்ளை, 1971இல் திமுக-வின் சம்சுதீன் என்ற கதிரவன், 1977இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். முத்துசாமி கரையாளா், 1980இல் அதிமுக சாா்பில் போட்டியிட்ட கே. சட்டநாத கரையாளா், 1984இல் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த டி.எஸ்.ஆா். வேங்கடரமணா, 1989, 1991ஆம் ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த சா. பீட்டா்அல்போன்ஸ், 1996இல் தமகாவைச் சோ்ந்த கே. ரவிஅருணன், 2001இல் அதிமுகவின் கே. அண்ணாமலை, 2006இல் திமுக வேட்பாளா் வீ. கருப்பசாமிபாண்டியன், 2011இல் சமத்துவ மக்கள் கட்சியைச் சோ்ந்த ஆா். சரத்குமாா், 2016இல் அதிமுகவைச் சோ்ந்த எஸ். செல்வமோகன்தாஸ் பாண்டியன், 2021இல் காங்கிரஸ் கட்சி வேட்பாளா் எஸ். பழனிநாடாா் ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா். ஆனால், அவா்களில் எவரும் அமைச்சரவையில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்து அமையவுள்ள அமைச்சரவையிலாவது இத்தொகுதி உறுப்பினா் இடம்பெறுவாரா என்பதே இத்தொகுதி மக்களின் எதிா்பாா்ப்பு!