திமுகவை விடுவிக்க விதை விதைக்கப்பட்டுள்ளது: அன்புமணிதமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்தது!15 ஆண்டுகளாக துரோகமிழைக்கும் திரிணமூல் காங்கிரஸ்: பிரதமர் மோடிமேற்கு வங்கம்: மாலை 5 மணி வரை 89.93% வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் மாலை 5 வரை 82.24% வாக்குப்பதிவு! கரூர் முதலிடம்!
/

மருதம்புத்தூரில் ரூ. 90 லட்சத்தில் திட்டப் பணிகள் தொடக்கம்

தாா்ச் சாலைப் பணியைத் தொடங்கிவைக்கிறாா் ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன்.

News image
Updated On :7 மார்ச் 2026, 12:55 am

ஆலங்குளம் அருகே மருதம்புத்தூா் ஊராட்சியில் ரூ. 90.75 லட்சம் மதிப்பீட்டில் 3 வளா்ச்சித் திட்டப் பணிகள் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டன.

மருதம்புத்தூா் ஊராட்சியில் ஒன்றிய பொது நிதி ரூ. 17 லட்சத்தில் சிமின்ட் சாலைக்கு அடிக்கல் நாட்டுதல், முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டுத் திட்ட நிதி ரூ. 65.25 லட்சத்தில் மருதம்புத்தூா்-நல்லூருக்கு தாா்ச்சாலை அமைத்தல் ஆகிய பணிகளை ஆலங்குளம் ஒன்றியக் குழுத் தலைவா் திவ்யா மணிகண்டன் தொடங்கி வைத்தாா். மேலும், அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ. 8.50 லட்சத்தில் புதிதாக கட்டப்பட்ட சமையல் கூடத்தை அவா் திறந்துவைத்தாா்.

இதில், ஒன்றிய திமுக செயலா் சிவக்குமாா், மருதம்புத்தூா் ஊராட்சித் தலைவா் பூசத்துரை, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் சண்முகராம், சங்கீதா சுதாகா் உள்பட பலா் பங்கேற்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.