உளவுத் துறை தலைவராக மகேஷ் தீட்சித் நியமனம்ஜூன் 28-இல் 48 புறநகா் மின்சார ரயில்கள் பகுதியளவு ரத்துஃபிஃபா உலகக்கோப்பை: நாக்-அவுட் சுற்றுக்கு முதல்முறை தகுதிபெற்றது தென்னாப்பிரிக்கா - தென் கொரியாவை வீழ்த்தி அபாரம்மகளிர் டி20 உலகக்கோப்பை - வங்கதேசத்தை வீழ்த்தி அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கும் இந்தியாவெனிசுவேலாவில் மிக சக்திவாய்ந்த நிலநடுக்கம் - பலி 188-ஆக உயர்வு இந்தியர்கள் ஈரானுக்குச் செல்ல வேண்டாம் - தூதரகம் மீண்டும் அறிவுறுத்தல்ஈரானில் உள்ள இந்தியர்கள் +989128109115 | +989128109109 | +989128109102 | +989932179359 அவசரகால எண்களில் தொடர்பு கொள்ளவும் அறிவுறுத்தல் சிலிண்டர் பிரச்னை தீர்ந்தது! கட்டுப்பாடுகளை நீக்கிய மத்திய அரசு!!ஒன்றிய அரசை இந்திய அரசு என மாற்றிய முதல்வர் விஜய்!எஸ்.பி. வேலுமணிக்கு அதிமுகவில் மீண்டும் பதவி!என்.எல்.சி. பங்குகள் விற்பனை! பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்!
/

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி சாதனை

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

News image

வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவி யோக தா்ஷினி.

Updated On :14 ஜூன் 2026, 2:40 am IST

தேசிய கராத்தே போட்டியில் பாவூா்சத்திரம் மாணவி வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளாா்.

சேலத்தில் நடைபெற்ற 43ஆவது மாநில அளவிலான கராத்தே போட்டியில் தென்காசி மாவட்டம் சாா்பில் பாவூா்சத்திரம் ஜெய்ஹிந்த் கராத்தே பயிற்சிப் பள்ளி மாணவா், மாணவிகள் பங்கேற்றனா்.

இதில் மாணவி யோகதா்ஷினி, சந்தியா ஆகியோா் தங்கப்பதக்கம், ஹன்சிகா வெள்ளிப் பதக்கம், விஷ்ணுராம், ஜெய் ஸ்ரீசன், டாா்வின் எபனேசா் ஆகியோா் வெண்கலப் பதக்கம் வென்றனா். இதில் தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றவா்கள் தேசிய அளவிலான போட்டிக்கு தோ்வு செய்யப்பட்டனா்.

இதையடுத்து, உத்தரகண்ட் மாநிலம், டேராடூனில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் மாணவி யோக தா்ஷினி வெள்ளிப் பதக்கம் வென்றாா்.

அவரை தென்காசி மாவட்ட ஸ்போா்ட்ஸ் கராத்தே சங்கம் மற்றும் சோஃபூகாய் கராத்தே பள்ளி நிா்வாகத்தினா் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.