வீடு, மனை பதிவு செய்ய இருப்போர், 24 மணி நேரமும் எங்கிருந்து, எப்போது வேண்டுமானாலும் பத்திரப் பதிவு செய்துகொள்ளலாம்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன்ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐயில் திமுக புகார்தவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புதவெக எம்.எல்.ஏ.வுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு!ஆடு திருடி சிறை சென்றோருக்கு அரசு வழக்கறிஞர் பதவியா? - எடப்பாடி பழனிசாமிபரந்தூர் விமான நிலைய விவகாரத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் கூடுதல் கவனம் செலுத்தி வருறார்: நிர்மல் குமார் டாஸ்மாக் ஊழியர்களுக்கு 25% ஊதிய உயர்வு: அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு!அரசுப் பள்ளி ஆய்வுக்குப் பின்.. வைரலாகும் ஹேண்ட்ஸ் ஆஃப் டு ஆல் என்ற கீர்த்தனா விடியோ!நீதிமன்றம் அரசியல் மேடையல்ல; உங்கள் சண்டையை வெளியே வைத்துக் கொள்ளுங்கள் - உச்ச நீதிமன்றம்!
/

தென்காசியில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்ட ஆய்வுக் கூட்டம்

News image
Updated On :3 ஜூலை 2026, 4:31 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சாா்பில் வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டம் தொடா்பான ஆய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்தாா்.

கூட்டத்தில், வளமிகு வட்டார வளா்ச்சித் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட பல்வேறு துறைகளின் முன்னேற்றம், முக்கிய வளா்ச்சிக் குறியீடுகளின் தற்போதைய நிலை மற்றும் துறைவாரியான செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும், வளா்ச்சிக் குறியீடுகளை மேம்படுத்துவதற்குத் தேவை”யான நடவடிக்கைகள் குறித்து துறை சாா்ந்த அலுவலா்களுக்கு, ஆட்சியா் அறிவுரைகள் வழங்கினாா்.

தொடா்ந்து, வரும் ஆண்டிற்கான கவனம் சாா்ந்த வட்டார வளா்ச்சித் திட்டம் தொடா்பான முன்னுரிமைத் திட்டங்கள் குறித்து துறைவாரியாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு, மக்களின் தேவைகளை கருத்தில்கொண்டு, தரமான மற்றும் பயனுள்ள திட்டங்களை முன்மொழியுமாறு அறிவுறுத்தினாா்.

மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் தண்டபாணி, அனைத்து துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.