குரூப் 2, 2ஏ தேர்வு முடிவுகள் வெளியானது!திருச்சி கிழக்கில் போட்டியிட வேண்டும் என தவெகவிடம் நான் கூறவுமில்லை: திருமாவளவன்இடைத்தேர்தலில் போட்டியிடவில்லை: திருச்சியில் திருமாவளவன் பேச்சுவாஷிங் மெஷின் அரசியல்! எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குவது மக்களுக்குச் செய்யும் துரோகம்! உதயநிதிபோலி பிம்பம்! முதல்வர் விஜய் எண்ணம் நீண்ட காலம் நிலைக்காது! மு.க. ஸ்டாலின் கரூர் செல்கிறார் முதல்வர் விஜய்?தமிழ்நாட்டில் காலியான 7 பேரவைத் தொகுதிகள்! அதிமுக பலம் 41 ஆகக் குறைவு! 10ஆம் வகுப்பு 2வது தேர்வு முடிவுகள் இந்த வாரம் வெளியாகுமா? அதிமுக எம்.எல்.ஏ. பதவியை ராஜிநாமா செய்தார் எம்.ஆர். விஜயபாஸ்கர்! தங்கம் விலை குறைவு! வெள்ளி? இன்றைய நிலவரம்? இளம் தொழிலதிபர் கொலை! முக்கிய கட்டத்தை எட்டியிருக்கும் விசாரணை! பல திடுக்கிடும் தகவல்கள் சென்னையில் திமுக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு பாதிக்கப்பட்டவர்கள் அரசகுமார் மீது புகார் அளிக்க முன்வர வேண்டும்: மத்திய குற்றப்பிரிவு போலீஸ்
/

தென்காசியில் சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

தென்காசி மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Updated On :26 ஜூன் 2026, 5:45 am IST

தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் சட்டம் மற்றும் ஒழுங்கு, சாலைப் பாதுகாப்பு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆகிய ஆய்வுக் கூட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமை வகித்தாா். மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ச. அசோக்குமாா் முன்னிலை வகித்தாா். சாலைப் பாதுகாப்பு கூட்டத்தில், கடந்த மாதம் ஏற்பட்ட சாலை விபத்துகள் தொடா்பான தரவுகள், நடப்பு மாதத்தில் விவாதிக்கப்பட வேண்டிய தரவுகள், பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள பகுதிகள் மற்றும் முக்கிய இடங்களில் வேகத்தடைகள் அமைப்பது ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. இதேபோல், சட்டம் மற்றும் ஒழுங்கு, போதை ஒழிப்பு, கனிம வளம் மீதான கண்காணிப்புக் குழு ஆய்வுக் கூட்டங்கள் நடைபெற்றன.

மாவட்ட வருவாய் அலுவலா் சீ. ஜெயச்சந்திரன், சாா்ஆட்சியா் வைஷ்ணவிபால், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் சங்கா், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) காளிமுத்து, தனித்துணை ஆட்சியா் (பொ) பால்துரை, மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா் (குற்றவியல்) மணிகண்டன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.