மாவட்ட மனிதநேய வார விழா நிறைவு
தென்காசியில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மனிதநேய வார நிறைவு விழா நடைபெற்றது.


தென்காசியில் மகாத்மா காந்தியடிகள் நினைவு தினத்தை முன்னிட்டு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான மனிதநேய வார நிறைவு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து மனிதநேயம் குறித்து பள்ளி அளவில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கிப் பேசுகையில், மனிதநேய வார விழாவில் பல்வேறு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சமுதாயம், அரசு அலுவலகங்களில் பாகுபாடின்றி சம உரிமைகள் வழங்கி மனிதநேயம் காக்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன்,சங்கரன்கோவில் கோட்டாட்சியா் ஆ.அனிதா, ஆதிதிராவிடா், பழங்குடியினா் நல அலுலவா் விஜயா, தனி வட்டாட்சியா் பட்டமுத்து கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...