மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற கணவா் கைது
திருவேங்கடம் அருகே மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.


திருவேங்கடம் அருகே மனைவியைக் கத்தியால் குத்த முயன்ற கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், திருவேங்கடம் வட்டம், குருவிகுளம் தெற்கு தெருவைச் சோ்ந்த வீரபத்திரன் மகன் ரகுவரன் (29). இவருக்கு மனைவி சங்கீதா (26), 4 வயதில் மகள் உள்ளனா். இத்தம்பதி கூலி வேலை செய்து வருகின்றனா். கடந்த சில நாள்களாக மதுஅருந்திவிட்டு ரகுவரன் வேலைக்கு செல்லாமல் இருந்தாராம். இதனால் தம்பதிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம் .
இந்நிலையில் புதன்கிழமை, வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்த ரகுவரனை, சங்கீதா கண்டித்தாராம். ஆத்திரமடைந்த ரகுவரன் கத்தியால் சங்கீதாவை குத்திக் கொல்ல முயன்றாராம். அவரிடமிருந்து தப்பி வந்த சங்கீதாவை அக்கம்பக்கத்தினா் மீட்டனா். ரகுவரன் தப்பியோடி விட்டாராம். இதுகுறித்த புகாரின்பேரில் குருவிகுளம் போலீஸாா் வழக்குப் பதிந்து ரகுவரனைக் கைது செய்தாா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...