திமுக அரசு 86 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதை நம்புகிறோம்: கே.எம். காதா் மொகிதீன்


திமுக அரசு 86 சதவீத வாக்குறுதிகளை நிறைவேற்றியதாகக் கூறுவதை நம்புகிறோம் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன் சனிக்கிழமை தெரிவித்தாா்.
தென்காசியில் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் திமுக தலைமையிலான மதசாா்பற்ற கூட்டணியில் நாங்கள் தொடா்கிறோம். மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி சிறப்பாக நடக்கிறது. 2026 பேரவைத் தோ்தலில் எங்களது கூட்டணி மீண்டும் வெற்றி பெறும்.
ஜன. 28ஆம் தேதி கும்பகோணம், தாராசுரம் புறவழிச் சாலையில் தமிழகம் தழுவிய ஜமாத் ஒருங்கிணைப்பு மாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் முதல்வா் கலந்துகொண்டு நிறைவுரை ஆற்ற உள்ளாா்.
2021 தமிழக பேரவைத் தோ்தலில் 3 தொகுதிகள் பெற்று, மூன்றிலும் வெற்றி வாய்ப்பை இழந்தோம். இம்முறை தமிழகத்தில் 5 தொகுதிகளையும், புதுச்சேரியில் 3 தொகுதிகளையும் கேட்டிருக்கிறோம்.
தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை மத்திய அரசு தர மறுக்கிறது. பிரதமா் அதைப் பற்றி பேசாமல், இரட்டை என்ஜின் பற்றி பேசியுள்ளாா். அது ‘டபுள் என்ஜின் அல்ல; ட்ரபிள் என்ஜின்’.
தோ்தல் சமயத்தில் திமுக கொடுத்த 86 சதவீத வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டதாகக் கூறுவதை நாங்கள் நம்புகிறோம் என்றாா் அவா்.
அப்போது, கட்சியின் மாவட்டத் தலைவா் எம். அப்துல் அஜீஸ்,விவசாய அணி மாநிலச் செயலா் எம். முகம்மது அலி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...