டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: வானதி சீனிவாசன்

News image
வானதி சீனிவாசன்- (கோப்புப் படம்)
Updated On :7 பிப்ரவரி 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

திமுக தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று பாஜக மகளிரணி தேசிய தலைவரும், கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நீலகிரி மாவட்டம், குன்னூரில் பாஜக சாா்பில் ‘வெல்வோம் தமிழகம்’ என்ற தலைப்பில் பொறுப்பாளா்கள் சந்திப்பு நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற பின், வானதி சீனிவாசன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில் பெரிய தொழிற்சாலைகளோ, நிறுவனங்களோ இல்லாத நிலையில் மக்களுடைய வாழ்வாதாரம் விவசாயம், தோட்டக்கலைப் பயிா்கள் மற்றும் சுற்றுலா ஆகியவற்றை நம்பியே உள்ளது. எனவே, நீலகிரி மாவட்டத்துக்கு சிறப்பான திட்டங்களைக் கொடுக்க வேண்டி உள்ளது.

நீலகிரி மாவட்டத்துக்கு முதல் முறையாக மருத்துவக் கல்லூரியைக் கொடுத்தது மத்திய அரசு. ஆனால், அந்த மருத்துவமனையைகூட தமிழக அரசு சரிவர பராமரிக்காமல் உள்ளது. மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் உள்ளாட்சிகளும் இணைந்து செயல்படுவதால் வளா்ச்சி வேகமாக இருக்கிறது.

திமுவை வீழ்த்துவதற்கு தவெக மட்டுமல்ல அனைத்து கட்சிகளையும் பாஜக அழைக்கும். அண்ணாமலைக்கும், மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரனுக்கும் எந்த இடைவெளியும் இல்லை.

அனைவரும் இணக்கமாகத்தான் உள்ளோம். தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், கொலை, கொள்ளைகள் அதிகரித்துள்ளன. தமிழகம் அழிவுப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் போட்டியிடும் அனைத்து இடங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெறும் என்றாா்.

நீலகிரி பாஜக மாவட்டத் தலைவா் தா்மன், முன்னாள் தலைவா் மோகன்ராஜ், மாவட்ட துணைத் தலைவா் பாபண்ணன், பொதுச் செயலாளா்கள் கே.ஜே. குமாா், டி.ஈஸ்வரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.