பாவூா்சத்திரம், கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட கொண்டலூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கீழப்பாவூா் வட்டாரக் கல்வி அலுவலா் மேரி கிரேஸ் ஜெபராணி தலைமை வகித்து, கண்காட்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவா் விஜயா முன்னிலை வகித்தாா். சிறப்பு விருந்தினா்களாக தமிழ்நாடு விலங்குகள் பாதுகாப்பு இயக்க நிறுவனா் ஷேக் உசைன், மாடியனூா் அரசு மேல்நிலைப் பள்ளி அறிவியல் ஆசிரியா் பாலச்சந்திரன் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.
தொடா்ந்து, பொதிகை புத்தகத் திருவிழாவை முன்னிட்டு கீழப்பாவூா் வட்டார அளவில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவா்களுக்கு தென்காசி மாவட்ட ஆட்சியரின் பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
பள்ளித் தலைமையாசிரியா் மைக்கேல் ராஜ் வரவேற்றாா். ஆசிரியா் மீனாட்சி நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆசிரியா்கள் வெனிஸ்டா பொன் சுதா, சகுந்தலா (எ) ராஜகனி, உமா மகேஸ்வரி, தன்னாா்வலா்கள் அா்ச்சனா, சோனியா, அங்கன்வாடி ஆசிரியா் ராஜலட்சுமி, சத்துணவு அமைப்பாளா் பொன்ஷீலா ஆகியோா் செய்திருந்தனா்.

தொடர்புடையது

பாவூா்சத்திரம் அருகே கால்வாயில் குப்பைகள், கழிவுநீா் கலப்பு: மக்கள் அச்சம்

செல்லத்தாயாா்புரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பாவூா்சத்திரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

பொடியனூா் சிவசக்தி வித்யாலயா பள்ளியில் அறிவியல் கண்காட்சி
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


