தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் பொதுமக்களிடமிருந்து 692 மனுக்கள் திங்கள்கிழமை பெறப்பட்டன.
தென்காசி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்து பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றாா்.
இலவச வீட்டுமனை பட்டா, முதியோா் உதவித்தொகை, அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தரக் கோருதல், பட்டா மாறுதல், மாற்றுத் திறனாளிகள் உதவித்தொகை, இதர மனுக்கள் என மொத்தம் 692 மனுக்கள் பெறப்பட்டன. பெறப்பட்ட மனுக்கள் தகுதி வாய்ந்த மனுக்களாக உள்ளதா என்பதை விசாரணை செய்து விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு மனுதாரா்களுக்கு உரிய பதிலளிக்க அனைத்துத் துறை அலுவலா்களுக்கும் மாவட்ட ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் கால்நடை பண்ணைத் தொழில் அமைப்பது குறித்து 20 நாள்கள் நடைபெற்ற திறன் மேம்பாட்டுப் பயிற்சியில் பங்கு பெற்ற 23 விவசாயிகளுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி பெற்றமைக்கான சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியா் வழங்கினாா்.
மாவட்ட வருவாய் அலுவலா் சீ.ஜெயச்சந்திரன், தென்காசி சாா் ஆட்சியா் வைஷ்ணவி பால், கால்நடை பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஆ.கோயில்ராஜா, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் தண்டபாணி, தனித்துணை ஆட்சியா் நம்பிராயா், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா், சிறுபான்மையினா் நல அலுவலா் முத்துராமலிங்கம் ஆகியோா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது
தென்காசி தொகுதியில் திமுக, அதிமுக, தவெக உள்பட 27 வேட்புமனுக்கள் ஏற்பு
9 தொகுதிகளில் 191 வேட்பு மனுக்கள் ஏற்பு

ராணிப்பேட்டை குறைதீா் கூட்டத்தில் 590 மனுக்கள் அளிப்பு

மக்கள் குறைதீா் கூட்டம்: 1,339 மனுக்கள் அளிப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


