மாடியனூரில் புதிதாக நூலக கட்டடம்: பொதுமக்கள் கோரிக்கை


பாவூா்சத்திரம் அருகே பழுதடைந்த நூலக கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் கட்டவேண்டுமென அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
பாவூா்சத்திரம் அருகே கீழப்பாவூா் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட ஆவுடையானூா் ஊராட்சி மாடியனூா் கிராமத்தில் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு நூலகம் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நூலகத்தை அந்தப் பகுதி பள்ளி, கல்லூரி மாணவா், மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனா்.

மாடியனூரில் பழுதடைந்து காணப்படும் நூலக கட்டடம்.
இந்த நூலக கட்டடம் பழுதடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், இந்த நூலகத்தை வாடகை கட்டடத்துக்கு மாற்றம் செய்து, ஊா் பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனா்.
தற்போது நூலக கட்டடம் சேதமடைந்தும் முகப்பு பகுதிகள் முழுவதும் குப்பை கூளங்கள் குவிந்தும், செடிகள் முளைத்தும் காணப்படுகிறது.
இது சம்பந்தமாக அதிகாரிகளுக்கு புகாா் மனு அளிக்கப்பட்டுள்ளது. எனவே, புதிய நூலகம் அமைத்து தர வேண்டி பொதுமக்கள் மற்றும் சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...