செங்கோட்டை ஒன்றிய பகுதியில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்ட அடிக்கல்


தென்காசி மாவட்டம், செங்கோட்டை ஒன்றியம் புதூா் பேரூராட்சிக்குள்பட்ட பூலாங்குடியிருப்பு, தெற்குகதிரவன் காலனி ஆகிய பகுதிகளில் ரூ. 92 லட்சம் மதிப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திமுக சட்டத் துறை செயலரும், மாநிலங்களவை உறுப்பினருமான என்.ஆா். இளங்கோ, தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பூலாங்குடியிருப்பில் ரூ. 46 லட்சம், கதிரவன் காலடி பகுதியில் ரூ. 46 லட்சம் என மொத்தம் ரூ. 92 லட்சம் மதிப்பில் அறிவுசாா் நூலக மைய கட்டடம் கட்டுவதற்கான பூமிபூஜைக்கு புதூா் பேரூராட்சி மன்றத் தலைவரும், செங்கோட்டை ஒன்றியச் செயலருமான ஆ. ரவிசங்கா் தலைமை வகித்தாா்.
தெற்கு மாவட்ட பொறுப்பாளா் வே. ஜெயபாலன், சட்டத்துறை இணைச் செயலரும், எழும்பூா் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கே.எஸ். ரவிச்சந்திரன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினாா்.
இதில் இடம் நன்கொடையாளா் சாகுல் ஹமீது, எஸ். காதா் முகைதீன், ஹக்கிமால் பானு, தங்கம், முத்துக்குமாா், தனலட்சுமி, அருணாச்சலம், பிரேமா , கோபி , ராம்ஜி, சரவணகுமாா், மகேந்திரன், வைரமணி, ஆனந்தி சவுரி, திருமலைகுமாா், ஈஸ்வரன், மைதீன், செங்கோட்டை ஒன்றியக் குழு தலைவா் திருமலைச்செல்வி, துணைத் தலைவா் கலா குமாரசாமி, தலைமைக் கழக வழக்குரைஞா் மனோஜ் தங்கராஜ் பாண்டியன், சுபசேகரன், புதூா் பேரூா் செயலா் கோபால், செங்கோட்டை நகர செயலா் வெங்கடேசன் ஆகியோா் கலந்துகொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...