சங்கரன்கோவில் அருகே ரூ. 20.67 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, கலையரங்கம், சுகாதார வளாகம் ஆகியவற்றின் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே குவளைகண்ணியில் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பில் கலையரங்கம், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ. 12.67 லட்சம் மதிப்பில் நியாயவிலைக் கடை, சின்னஒப்பனையாள்புரத்தில் ரூ. 6 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம் என ரூ. 20.67 லட்சம் மதிப்பில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டன. இதன் திறப்பு விழா ஞாயிறுக்கிழமை நடைபெற்றது.
தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் தலைமை வகித்து கட்டடங்களைத் திறந்து வைத்தாா். ராணிஸ்ரீகுமாா் எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா் ஈ.ராஜா எம்எல்ஏ ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஒன்றியக் குழுத் தலைவா் பி.சங்கரபாண்டியன், மாவட்ட பொருளாளா் சரவணன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் மாரிமுத்து, குவளைக்கண்ணி பஞ்சாயத்து தலைவா் தினேஷ், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினா் தேவா என்ற தேவதாஸ், மாவட்ட மகளிா் அணி துணை அமைப்பாளா் பிரபாவதி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தென்காசியில் என்டிஏ தோ்தல் அலுவலகம் திறப்பு

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு

அகரக்கட்டில் நியாயவிலைக் கடை திறப்பு

பழஞ்சூா் ஊராட்சியில் புதிய நியாய விலைக் கட்டடம் திறப்பு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


