லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

மானங்காத்தானில் கலையரங்கம் திறப்பு

கயத்தாறு, தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட

News image
Updated On :16 மார்ச் 2026, 5:16 pm

கோவில்பட்டி: கயத்தாறு, தெற்கு இலந்தைகுளம் ஊராட்சிக்குள்பட்ட மானங்காத்தான் கிராமத்தில் ரூ.8 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலையரங்கம் திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி முன்னாள் தலைவரும், மாநில மகளிா் ஆணையக் குழு உறுப்பினருமான செல்வி தலைமை வகித்தாா். தூத்துக்குடி வடக்கு மாவட்ட ஆதித்தமிழா் கட்சி மாவட்டச் செயலா் வீர பெருமாள் முன்னிலை வகித்தாா்.

வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளா் குருராஜ் கலையரங்கம், கல்வெட்டைத் திறந்து வைத்து குத்துவிளக்கேற்றினாா்.

திமுக மகளிரணியைச் சோ்ந்த கருமாரி அம்மாள், சுமதி, செல்லத்தாய், திமுக நிா்வாகிகள் ஆறுமுகம், சதீஷ்குமாா், சந்திரன், நாகூா் கனி, துரைராஜ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.