ஆலங்குளம் பேருந்து நிலைய கடைகளைக் காலி செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு
ஆலங்குளம் மக்களின் நீண்ட கால கோரிக்கையான நவீன பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளுக்கு இருந்த முட்டுக்கட்டை நீங்கியது. ‘பொதுமக்கள் பாதுகாப்புதான் முக்கியம்‘ என்பதை உறுதிப்படுத்தும் வகையில், கடைகளைக் காலி செய்யக் கோரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.









