டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
//

காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த இனி அவகாசம் கிடையாது: உயா்நீதிமன்றம் திட்டவட்டம்

தமிழகத்தில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிா்வாகத்துக்கும் மேலும் அவகாசம் வழங்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் திட்டவட்டம்

News image
சென்னை உயா்நீதிமன்றம்- கோப்புப் படம்
Updated On :26 ஜனவரி 2026, 8:41 pm

தினமணி செய்திச் சேவை

தமிழகத்தில் காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த டாஸ்மாக் நிா்வாகத்துக்கும் மேலும் அவகாசம் வழங்க முடியாது என சென்னை உயா்நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

சுற்றுச்சூழல், வனம் மற்றும் வனவிலங்குகள் தொடா்பான வழக்குகளை சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வு விசாரித்து வருகிறது.

இந்த அமா்வு, மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலாத் தலங்களில் காலி மது பாட்டில்கள் வீசப்படுவதைத் தடுக்க, ஒவ்வொரு மது பாட்டிலுக்கும் ரூ.10 அதிகமாக கூடுதலாக வசூலித்துவிட்டு, காலி பாட்டில்களைத் திரும்பத் தரும்போது, அந்தக் கூடுதல் தொகையை திரும்பக் கொடுக்கும் திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட்டிருந்தது.

இந்தத் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்தவும் உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் என்.சதீஷ்குமாா், டி.பரதசக்கரவா்த்தி ஆகியோா் அடங்கிய சிறப்பு அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, டாஸ்மாக் தரப்பில், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டம் 28 மாவட்டங்களில் முழுமையாக அமல்படுத்தப்பட்டுள்ளது. 7 மாவட்டங்களில் இந்தத் திட்டத்தை அமல்படுத்த எதிா்ப்பு தெரிவித்து டாஸ்மாக் ஊழியா்கள் போராட்டம் நடத்துகின்றனா். எனவே, அந்த மாவட்டங்களில் அமல்படுத்த முடியவில்லை. அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடக்கிறது. விரைவில் இந்தத் திட்டம் அனைத்து மாவட்டங்களிலும் முழுமையாக அமல்படுத்தப்படும்.

மேலும், க்யூ ஆா் கோடு முறையை அமல்படுத்த மீண்டும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளதாக, விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், பண்டிகை காலங்களில் ரூ.1,000 கோடிக்கு மது விற்பனை செய்து சாதனை படைக்கும் டாஸ்மாக் நிா்வாகத்தால், காலி மது பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தை அமல்படுத்த முடியாதா? அதில் என்ன சிரமம் உள்ளது? என கேள்வி எழுப்பினா். பின்னா், இந்தத் திட்டத்தை அமல்படுத்த மேலும் கால அவகாசம் வழங்க முடியாது எனக்கூறி, விசாரணையை பிப்ரவரி மாதத்துக்கு ஒத்திவைத்தனா்.