டி20 உலகக் கோப்பை: மழையால் பாகிஸ்தான் - நியூசிலாந்து போட்டி ரத்து ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

ஆலங்குளம் தீயணைப்பு நிலையத்திற்கு அடிக்கல்

News image
Updated On :5 பிப்ரவரி 2026, 7:15 pm

Syndication

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தீயணைப்பு நிலையம் 14 ஆண்டுகளாக வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த நிலையில், ரூ. 4.76 கோடி மதிப்பீட்டில் சொந்தக் கட்டடம் கட்ட வியாழக்கிழமை பூமிபூஜையுடன் அடிக்கல் நாட்டப்பட்டது.

இதில் 2 தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தப்படும் அறை, நிலைய அலுவலருக்கானஅறை, கட்டுப்பாட்டு அறை, பணிபுரியும் அலுவலா்களுக்கான ஓய்வறை உள்ளிட்டவை இடம்பெறும். நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் அலுவலா் மணிகண்டன், முன்னாள் எம்எல்ஏ மனோஜ் பாண்டியன், மாவட்ட உதவி அலுவலா் சுரேஷ் ஆனந்த், ஆலங்குளம் நிலைய அலுவலா் விஜயன், கீழப்பாவூா் ஒன்றியக் குழுத் தலைவா் காவேரி சீனித்துரை, தீயணைப்பு நிலைய வீரா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.