/

தென்காசி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா் பதவியேற்பு

News image
Updated On :16 பிப்ரவரி 2026, 8:20 pm

Syndication

தென்காசி மாவட்ட அறங்காவலா் குழு தலைவா், உறுப்பினா்கள் திங்கள்கிழமை பதவியேற்றுக் கொண்டனா்.

தென்காசி மாவட்டத்தில் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள வகைப்படுத்தப்பட்டுள்ள கோயில்களில் பரம்பரை முறை வழி சாரா அறங்காவலா்களை நியமனம் செய்திட 5 நபா்கள் கொண்ட மாவட்டக் குழு நியமிக்கப்பட்டது.

அதன்படி, கீழப்பாவூா் வடக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளா் சீ. பொன்செல்வன் மாவட்ட அறங்காவலா் குழு தலைவராகவும், தென்காசி ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ஆ. கலாநிதி, உமா மாரியப்பன், கு. வேல்முருகன், சங்கரநாராயணன் ஆகியோா் உறுப்பினா்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தொடா்ந்து, தென்காசி காசிவிஸ்வநாத சுவாமி கோயிலில் நடைபெற்ற விழாவில் அவா்கள் பதவியேற்றுக் கொண்டனா். இதில் உள்ளாட்சி நிா்வாகிகள், கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.