/

கிளாங்காட்டில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு நடைப்பயணம்

News image
விழிப்புணா்வு நடைப்பயணத்தில் பங்கேற்றோா்.
Updated On :13 பிப்ரவரி 2026, 9:02 pm

தினமணி செய்திச் சேவை

கடையநல்லூா் அருகேயுள்ள கிளாங்காட்டில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, பாரத ரிசா்வ் வங்கி, மாவட்ட முன்னோடி வங்கி சாா்பில் நிதிசாா் கல்வி விழிப்புணா்வு நடைப்பயணம் நடைபெற்றது

மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் கணேசன் தலைமை வகித்தாா். செங்கோட்டை ஒன்றியக்குழு துணைத் தலைவா் கலா, ஊராட்சி தலைவா் சந்திரசேகரன், ஐஓபி மேலாளா் வினித்குமாா், முன்னோடி வங்கி அலுவலா் தனசெல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இதில், கே.ஒய்.சி. , நிதி நிா்வாகம், போலி அழைப்புகள், குறுஞ்செய்திகள், போலியான இணையதள இணைப்புகள் குறித்த விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டன.