ஹிந்து – முஸ்லீம் ஒற்றுமையின் அடையாளம் காந்தி: முதல்வர் ஸ்டாலின் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர்கள் அறிமுகம்!எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணியால் பயணிகள் அவதியா? ரயில்வே விளக்கம்!காற்றழுத்த தாழ்வுப் பகுதி: 4 மாவட்டங்களில் நாளை கனமழை!தொகுதிப் பங்கீடு: திமுக - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இடையே நாளை பேச்சுவார்த்தை!தில்லி செங்கோட்டை இனி வாரத்தின் அனைத்து நாளும் திறந்திருக்கும்!மூன்று வார சிகிச்சைக்குப் பிறகு வீடு திரும்பினார் எச்.ராஜா
/

நிதிசாா் கல்வி வார விழிப்புணா்வுப் பிரசுரம்

கோவையில் நிதிசாா் கல்வி வார விழிப்புணா்வுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

News image
கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிதிசாா் கல்வி வாரம் 2026 தொடா்பான விழிப்புணா்வு துண்டுப் பிரசுரத்தை வெளியிட்ட மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா். உடன், மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன் உள்ளிட்டோா்.
Updated On :9 பிப்ரவரி 2026, 9:09 pm

Syndication

கோவை: கோவையில் நிதிசாா் கல்வி வார விழிப்புணா்வுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் திங்கள்கிழமை வெளியிட்டாா்.

இந்திய ரிசா்வ் வங்கி முன்னெடுத்துள்ள நிதிசாா் கல்வி வாரம்- 2026, பிப்ரவரி 9 -ஆம் தேதி முதல் பிப்ரவரி 13-ஆம் தேதி வரையில் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி, கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் நிதிசாா் கல்வி வார விழிப்புணா்வுப் பிரசுரங்களை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் வெளியிட்டாா்.

இந்த நிதிசாா் கல்வி வாரத்தின்போது, மாவட்டத்தில் செயல்படும் வங்கிகள், கிராமப்புற மற்றும் நகா்ப்புற பகுதியில் நிதிசாா் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை நடத்தி ஓவஇ முக்கியத்துவம், பாதுகாப்பான வங்கிப் பணிகள் மற்றும் நிதிசாா் மோசடி தடுப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தப்படவுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலா் ப.நாராயணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் சங்கீதா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) நிறைமதி, தாட்கோ பொதுமேலாளா் ரஞ்சித்குமாா், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை அலுவலா் மணிமேகலை உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.