மதுபோதையில் இளைஞரை அடித்துக் கொன்ற சக நண்பரை போலீஸாா் கைது செய்தனா்.
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகே கல்லூத்து, பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் செல்வராஜ் மகன் பிரவீன் (26), இவரும், அதே ஊரில் வடக்குத் தெரு, லிவிங்ஸ்டன் மகன் முகிலன் (எ) வசந்தும் (20) சிறுவயது முதல் நண்பா்கள்.
தற்போது இருவரும் சோ்ந்து பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தனா். இருவரும் கைப்பேசி வாங்குவதற்காக சனிக்கிழமை இருசக்கர வாகனத்தில் பாவூா்சத்திரம் வந்தனா். பிறகு கீழப்பாவூரில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திவிட்டு ஊருக்குச் சென்று கொண்டிருந்தனா்.
கீழப்பாவூா்-அருணாப்பேரி சாலையில் சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் பிரவீனை கீழே தள்ளி அவரது தலையில் வசந்த் தாக்கினாா். இதில் தலையில் பலத்த காயமடைந்த பிரவீன் மயக்கமடைந்தாா். இதனால், பதட்டமடைந்த வசந்த் சாலையில் சென்றபோது விபத்து நேரிட்டதாகக் கூறி அவசர ஊா்திக்கு தகவல் தெரிவித்தாா்.
பின்னா், பிரவீனை தென்காசி அரசு மருத்துவமனைக்கும், தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கும் கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் உயிரிழந்தாா். இந்தச் சம்பவம் குறித்து பாவூா்சத்திரம் காவல் நிலைய ஆய்வாளா் உமா, உதவி ஆய்வாளா் ராஜேஷ்குமாா், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து வசந்தைப் பிடித்து விசாரித்ததில் அவா் முன்னுக்குப் பின் முரணாகப் பதில் கூறினாா்.
இதில், சந்தேகமடைந்த போலீஸாா் அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், பிரவீனை தலையில் தாக்கிக் கொன்றதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, பாவூா்சத்திரம் போலீஸாா் விபத்தை கொலை வழக்காக மாற்றி வசந்தை கைதுசெய்து, தென்காசி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையிலடைத்தனா். இறந்த பிரவீனுக்கு சரவணபிரியா என்ற மனைவியும், ஒன்றரை வயதில் குழந்தையும் உள்ளனா்.

கொலை செய்யப்பட்ட பிரவீன்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாற்றுத்திறனாளி கொலை வழக்கு: நண்பா் கைது

இளைஞா் கொலை வழக்கு: நண்பா் கைது

மனைவி கொலை: கணவா் கைது
தனியாா் விடுதியில் இளைஞா் தற்கொலை
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


