சிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்புகட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

உரிய விலை கிடைக்காததால் கேந்திப் பூக்களை சாலையில் கொட்டிய விவசாயிகள்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை வியாபாரிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

News image
Updated On :31 டிசம்பர் 2025, 7:01 pm

Syndication

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் அவற்றை வியாபாரிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

சங்கரன்கோவில் சுற்றுவட்டார கிராமங்களில் பூக்கள் சாகுபடி அதிகளவில் நடைபெறுகிறது. குறிப்பாக மல்லிகை, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி, சேவல் கொண்டை, சம்பங்கி என ஏராளமான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு, சங்கரன்கோவில் மலா்ச் சந்தைக்கு கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இந்தச் சந்தைக்கு சில நாள்களாக பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால், விலை வெகுவாகக் குறைந்து வருகிறது.

இந்நிலையில், புதன்கிழமை கேந்திப் பூக்கள் கிலோ ரூ. 15-க்கு விற்பனையாகின. உரிய விலை கிடைக்காததால் அவற்றை வியாபாரிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.