கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வே
/

ஒரு கிலோ ரூ. 10க்கு விற்பனை: கேந்திப் பூக்களை சாலையில் கொட்டிய வியாபாரிகள்

சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய லாபம் கிடைக்காததால் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு டன் கேந்திப் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

News image
கோயிலின் வடபுறம் பூச்சந்தைக்கு வெளியே சாலையில் கொட்டப்பட்ட கேந்திப் பூக்கள்.
Updated On :24 பிப்ரவரி 2026, 7:52 pm

தினமணி செய்திச் சேவை

சங்கரன்கோவிலில் கேந்திப் பூக்களுக்கு உரிய லாபம் கிடைக்காததால் சந்தைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு டன் கேந்திப் பூக்களை விவசாயிகள் சாலையில் கொட்டிச் சென்றனா்.

சங்கரன்கோவில், அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களில் பூ சாகுபடி அதிக அளவில் நடைபெறுகிறது. மல்லி, பிச்சி, முல்லை, கனகாம்பரம், செவ்வந்தி, கேந்தி, சேவல், சம்பங்கி உள்ளிட்ட பல வகையான பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு அவை சங்கரன்கோவில் பூச்சந்தைக்கு கொண்டுவரப்பட்டு அங்கு ஏலம் மூலம் விற்பனை செய்யப்படுகிறது .

கடந்த சில நாள்களாக கேந்திப் பூக்களின் வரத்து அதிகமாக இருப்பதால் அவற்றுக்கு விலையில்லை. இதனால் அவற்றின் விலையும் வெகுவாகக் குறைந்தது. இந்த நிலையில், திங்கள்கிழமை கேந்திப் பூ விலை, கிலோ ரூ. 10-க்கு விற்பனையானது. உரிய வருவாய் கிடைக்காததால் விவசாயிகள், வியாபாரிகள் ஒரு டன் கேந்திப் பூக்களை சந்தைக்கு வெளியே சாலையில் கொட்டினா்.