ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!
ராணிப்பேட்டையில் காணாமல் போன குழந்தை 35 நாள்களுக்குப் பிறகு மீட்கப்பட்டது பற்றி...

குழந்தை மகேஸ்வரி - தினமணி
ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே சாலை ஓரத்தில் தூங்கிக் கொண்டிருந்த ஒரு வயது பெண் குழந்தையை 35 நாள்களுக்குப் பிறகு ஆந்திரத்தில் தமிழக காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த லாலாபேட்டை பகுதி சேர்ந்தவர் நாடோடி தம்பதியினர் சேகர் (46) பிரேமா (23) இவர்கள் சாலை ஓரம் பாட்டில்களை சேகரித்தும் யாசகம் பெற்றும் வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களுக்கு ஒரு வயதில் மகேஸ்வரி என்ற பெண் குழந்தை உள்ளது. இவர்கள் கடந்த செப்டம்பர் மாதம் 23 ஆம் தேதி சிப்காட் அருகே சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்தபோது திடீரென ஒரு வயது பெண் குழந்தையான மகேஸ்வரி மாயமானார்.
இது குறித்து குழந்தையின் பெற்றோர் சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் போதிய துப்பு கிடைக்காத காரணத்தினால் ராணிப்பேட்டை காவல் கண்காணிப்பாளர் சிபின் உத்தரவின் பேரில் 6 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில் லாலாப்பேட்டை பகுதியைச் சேர்ந்த பூபதி - கௌசல்யா தம்பதியினரின் தோழியான ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த மல்லேஸ்வரி என்பவர் திருமணம் ஆகி 24 ஆண்டுகளான நிலையில் குழந்தை இல்லாத காரணத்தினால் அவரது கணவர் 20 ஆண்டுகளுக்கு முன்பே விட்டுச் சென்றதாக கூறப்படுகிறது.
இதனை அறிந்த பூபாலன் - கௌசல்யா தம்பதியினர் தனிமையில் வசிக்கும் மல்லேஸ்வரிக்கு உதவும் நோக்கத்தில் இந்த குழந்தையை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் சென்று கொடுத்ததாக தெரியவந்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் ஆந்திர மாநிலத்திற்கு சென்று ஏசி அறையில் இருந்த குழந்தையை மீட்டனர்.
இதனை அடுத்து இந்த சம்பவத்தில் தொடர்புடைய சந்தோஷ் (32), குமார் (30), பூபதி (42), கௌசல்யா (40), மல்லேஸ்வரி (44) ஆகிய 5 பேரையும் கைது செய்துள்ளனர்.
Summary
One-year-old girl who went missing in Ranipet rescued in Andhra Pradesh!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


