ஆந்திரத்தில் ‘ஒர்னாப்’ புயல்: 12 விமானங்கள் சேவை ரத்து
வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடக்கவுள்ள நிலையில்,

இண்டிகோ விமானங்கள் ரத்து - கோப்புப்படம்
வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ராஜமுந்திரி இடையே இயக்கப்படும் 12 இண்டிகோ விமானங்கள் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடந்து வருகிறது. புயல் கரையைக் கடக்கும்போது உயிா்ச் சேதங்கள் ஏற்படாமல் தடுக்க, சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினரும் உஷாா்படுத்தப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
புயல் கரையைக் கடக்கும்போது, அதிகபட்சம் மணிக்கு 125 கி.மீ. முதல் 135 கி.மீ. வரை பலத்த காற்று வீசக்கூடும். திடீரென இந்த வேகம் 150 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கப்பட்டுள்ள நிலையில், காக்கிநாடாவில் கனமழை பெய்து வருகிறது. பலத்த காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் சாய்ந்துள்ளதுடன், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது.
12 விமானங்கள் சேவை ரத்து
இந்த நிலையில், மாவட்ட வங்கக் கடலில் உருவான ‘ஒர்னாப்’ புயல், ஆந்திரத்தில் புதன்கிழமை (அக். 28) கரையைக் கடக்கவுள்ள நிலையில், சென்னையில் இருந்து விசாகப்பட்டினம், ராஜமுந்திரி இடையே இயக்கப்படும் 12 விமானங்கள் சேவை இன்று ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, சென்னையில் இருந்து செல்லும் 6 விமானங்களும், வருகை தரும் 6 விமானங்கள் என 12 இண்டிகோ விமானங்கள் இன்று(அக்.28) ரத்து செய்யப்பட்டுள்ளது.
விமானங்கள் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகள் தங்களது விமானப் பயண விவரங்களை சம்மந்தப்பட்ட விமான நிறுவத்திடம் உறுது செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'Arnab' cyclone in Andhra Pradesh: 12 flight services cancelled
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


