முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி! பசும்பொன் செல்கிறார் மு.க. ஸ்டாலின்!4 மாநிலங்களில் 28 எம்எல்சி தேர்தல் முடிவுகள்! காங்கிரஸ் பூஜ்ஜியம்!இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

ஒர்னாப் புயல்: ஆந்திரம் - தமிழகம் இடையேயான ரயில்கள் ரத்து!

ஒர்னாப் புயல் காரணமாக ஆந்திரம் - தமிழகம் இடையேயான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது பற்றி...

Cyclone Arnab: train cancellations between Andhra Pradesh and Tamil Nadu

ரயில் - கோப்புப் படம்

Updated On :

ஒர்னாப் புயல் காரணமாக ஆந்திரம் - தமிழகம் இடையேயான இரு ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான 'ஒர்னாப்' புயல், ஆந்திரத்தில் நர்சாபூர் - காக்கிநாடா இடையே ஏனாம் அருகே இன்று (அக். 28) காலை கரையைக் கடந்தது. முன்னதாக ஆந்திரத்தில் நேற்று இரவு முதல் விடிய விடிய பலத்த காற்றுடன் கனமழை பெய்தது.

இதையடுத்து ஆந்திரத்தில் இருந்து விமான சேவைகள் ரத்தான நிலையில் ஆந்திரம் - தமிழகம் இடையேயான சில ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுபற்றி வெளியிட்டுள்ள தகவலில்,

"ஒர்னாப் புயல் காரணமாக ரயில் எண் 06020 – நர்சாபூர் – தூத்துக்குடி சிறப்பு ரயில், ரயில் எண் 17291 – நர்சாபூர் – திருவண்ணாமலை சிறப்பு ரயில் ஆகிய இரண்டு ரயிகளும் இன்று முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

ரயில் எண் 06019 – தூத்துக்குடி – நர்சாபூர் சிறப்பு ரயில், பீமாவரம் டவுன் நிலையம் வரை மட்டுமே செல்லும். பீமாவரம் டவுன் - நர்சாபூர் இடையேயேயான சேவை பகுதியளவு ரத்து செய்யப்படுகிறது.

பயணிகள் இதைக் கவனத்தில் கொண்டு, அதற்கேற்ப தங்கள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Summary

Cyclone Arnab: Train cancellations between Andhra Pradesh and Tamil Nadu

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.