இந்திய சென்டிரல் வங்கியில் ரூ.14 கோடி மாயம், 187 பரிவர்த்தனைகள்! திருடியது எப்படி? யார்?உ.பி. எம்எல்சி தேர்தல்! மோடியின் வாரணாசி தொகுதியில் சமாஜவாதி வெற்றி!தேனி சிறையிலிருந்து தப்பிய மேலும் 2 கைதிகள் பிடிபட்டனர்! இதுவரை 15 பேர் கைது!இந்திய விமானி ஸ்மித் மச்சாருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் உயரிய விருது!தவெக ஆட்சி இருக்கும் வரை தமிழ்நாட்டுக்கு விடிவே இல்லை! மு.க. ஸ்டாலின் இளநிலை பயிற்சி அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!ராணிப்பேட்டையில் காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை ஆந்திரத்தில் மீட்பு!

ராணிப்பேட்டை: காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தை! போலீசார் தீவிர விசாரணை

ராணிப்பேட்டை அருகே ஒரு வயது பெண் குழந்தை காணாமல் போன சம்பவத்தில் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருவது குறித்து...

Ranipet: Missing one-year-old girl! Police are actively investigating

மகேஸ்வரி - படம் - தினமணி

Updated On :

ராணிப்பேட்டை அருகே கடந்த செப். 24 -ஆம் தேதி காணாமல் போன ஒரு வயது பெண் குழந்தையை தேடும் பணியில் 6 தனிப்படை போலீசாா் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை அடுத்த லாலாபேட்டை பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்த தம்பதி சேகா் (46), பிரேமா (23). பிளாஸ்டிக் பாட்டில் சேகரித்து விற்று சாலை ஓரம் வசித்து வரும் இவா்களின் ஒரு வயது பெண் குழந்தை மகேஸ்வரி கடந்த 24.09.2026 அன்று இரவு தூங்கிக் கொண்டிருந்தபோது காணாமல் போய்விட்டாா்.

அதிா்ச்சியடைந்த பெற்றோா், சிப்காட் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.அதன் பேரில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

மேலும் குழந்தையைக் கண்டுபிடிக்க எஸ்.பி பே.சிபின் தலைமையில் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு பல்வேறு இடங்களில் விசாரணை மேற்கொண்டு தீவிரமாக தேடி வருகின்றனா்.

பெண் குழந்தை மாயமாகி ஒரு மாதம் ஆகியும் இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் பெற்றோா் மற்றும் அப்பகுதி மக்கள் கவலை அடைந்துள்ளனா். குழந்தையை விரைந்து மீட்க காவல் துறையினா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளனா்.

Summary

Police are actively investigating the disappearance of a one-year-old girl near Ranipet.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.