திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருச்சி செல்கிறார் முதல்வர் விஜய்?

திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய் செல்லவுள்ளதாகத் தகவல்...

News image

முதல்வர் சி. ஜோசப் விஜய் - ANI

Updated On :30 மே 2026, 11:27 am IST

திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய் செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று, சில கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியமைத்துள்ளது. தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றார்.

பெரம்பூர், திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், பெரம்பூரைத் தக்கவைத்துக்கொண்டு திருச்சி கிழக்கு தொகுதியில் தனது பதவியை ராஜிநாமா செய்தார். விரைவில் திருச்சி கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இந்நிலையில் திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்க முதல்வர் விஜய், வரும் திங்கள்கிழமை(ஜூன் 1) அங்கு செல்லவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

இதற்காக திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் எதிரே உள்ள கல்லூரி மைதானத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

முதல்வர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்ற பெரம்பூர் தொகுதிக்கும் அவர் இன்னும் செல்லவில்லை.

முதல்வராகப் பொறுப்பேற்ற பிறகு விஜய், அண்மையில் 2 நாள் பயணமாக தில்லி சென்று பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரைச் சந்தித்து தமிழக கோரிக்கைகள் அடங்கிய மனுவை அளித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

CM vijay likely to meet tirchy east people on monday

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.