தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை: முதல்வர் கண்டிக்க மார்க்சிஸ்ட் கம்யூ. வலியுறுத்தல்

பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டதை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்

News image

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் - ANI

Updated On :28 மே 2026, 12:06 pm IST

கேரள மாநில முன்னாள் முதல்வர் பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டதை தமிழக முதல்வர் ச. ஜோசப் விஜய் கண்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

கனிமவள நிறுவனத்துடன் சட்டவிரோதமாக பணப் பரிமாற்றம் செய்ததாக எழுந்த புகாரின் பேரில், கேரள முன்னாள் முதல்வர் பினராயி விஜயனுக்குச் சொந்தமான கண்ணூர், திருவனந்தபுரம் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறையினர் புதன்கிழமையில் (மே 27) சோதனை நடத்தினர்.

இந்த நிலையில், இந்தச் சோதனை நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் மத்திய சென்னை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் நடத்தினர்.

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்

சென்னையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம் - ANI

போராட்டத்தின்போது, செய்தியாளர்களுடன் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி. செல்வா பேசியதாவது, "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய தலைவரும் கேரளத்தின் முன்னாள் முதல்வருமான பினராயி விஜயன் வீட்டில் அமலாக்கத் துறை சோதனை நடத்தப்பட்டுள்ளது. வாடகை வீட்டில் வசித்து வரும் பினராயி விஜயனின் வீட்டிலும், அவர் சார்ந்த 12 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

ஆர்எஸ்எஸ், பாஜக மற்றும் ராகுல் காந்தியும் (காங்கிரஸ்) சேர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை அவமானப்படுத்துவதற்காகவும் அரசியல் பழிவாங்கலுக்காகவும் நடத்தப்பட்ட சோதனையே. இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

அதுமட்டுமின்றி, இந்தச் சோதனைக்கு எதிராக மார்க்சிஸ்ட் நடத்திய போராட்டத்தில், ஒரு தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ. பேபியை காட்டுமிராண்டித்தனமாக கைது செய்துள்ளனர்.

குறிப்பாக, பினராயி விஜயனை அரசியல்ரீதியாகப் பழிவாங்கும் நோக்கத்தோடு, ஆர்எஸ்எஸ் - பாஜக மற்றும் மோடி - அமித் ஷாவும் சேர்ந்து, அமலாக்கத் துறையை வைத்து இம்மாதிரியான அவதூறு நடவடிக்கையை முன்னெடுத்திருக்கின்றனர்.

இதற்கு எதிராக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தில்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜரிவால் கண்டித்துள்ளனர். தமிழக முதல்வரும் தவெக தலைவருமான விஜய்யும், இதனைக் கண்டிக்க வேண்டும்.

மத்திய அரசின் ஏவல் அமைப்புகளாக அமலாக்கத் துறை, சிபிஐ செயல்படுவதை முதல்வர் விஜய் கண்டிக்க வேண்டும். அரசியலமைப்பின் மீது அக்கறை கொண்ட ஒவ்வொருவரும் பினராயி விஜயன் வீட்டில் நடந்த சோதனையைக் கண்டிக்க வேண்டும்.

தேசத்துக்காக போராடும் கம்யூனிஸ்டுகள், மார்க்சிஸ்டுகளை ஆர்எஸ்எஸ்ஸும் பாஜகவும் சேர்ந்து அமலாக்கத் துறை, சிபிஐ, காவல்துறையை வைத்து மோதினால், மார்க்சிஸ்டுகள் நேருக்குநேர் சண்டையிடுவோம்" என்று தெரிவித்தார்.

Summary

CPI(M) leaders and workers hold a protest in Chennai over the ED raid at the residence of former CM Pinarayi Vijayan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.