தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை: அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் விளக்கம்

தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது குறித்து எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் விளக்கமளித்துள்ளார்.

News image

அமைச்சர் சி.டி.ஆா். நிர்மல்குமார் - கோப்புப்படம்.

Updated On :23 மே 2026, 5:28 pm IST

தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது குறித்து எரிசக்தி வளம் மற்றும் சட்டத் துறை அமைச்சா் சி.டி.ஆா். நிா்மல்குமாா் விளக்கமளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் சென்னையில் அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் மின்சார தட்டுப்பாடு ஏதும் இல்லை. தமிழ்நாட்டிற்கு தேவையான அளவிற்கு மின்சாரம் உள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் மின்வெட்டு ஏற்படுவது ஏன் என மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது. பீக் ஹவர்சில் உள்ளூர் மின் தேவை திடீரென அதிகரிப்பதால் மின்தடைகள் ஏற்படுகின்றன. நிலத்தடி மின்கம்பிகள் பழுது, ஜம்பர் கட் மற்றும் மின்கம்பி துண்டிப்பால் மின்தடைகள் ஏற்படுகின்றன.

மின்மாற்றியில் பழுது அல்லது மின்மாற்றியில் அதிக சுமை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன. மழை, காற்று, இடி போன்ற வானிலை காரணமாக மின்தடைகள் ஏற்படுகின்றன. மின்தடைகளை உடனுக்குடன் சரிசெய்ய பராமரிப்பு குழுக்கள் அனைத்து மின்விநியோக வட்டங்களிலும் உருவாக்கப்பட்டுள்ளன. மின்தடைகளை சரிசெய்ய 24 மணிநேர கண்காணிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தற்காலிக பணியாளர்கள் கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

ஒருசில அதிகாரிகள் மெத்தனப்போக்காக உள்ளனர். பெரும்பாலான பணியாளர்கள் இரவு, பகலாக பணியாற்றுகின்றனர். தனி நபர்கள் சிலரின் தவறுகளாலும் மின்வெட்டு ஏற்படுகிறது. தவறு செய்யும் தனி நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தவறு செய்யும் தனி நபர்களை சிலர் தூண்டிவிடுவதாகவும் தகவல் உள்ளது. சீரமைப்பு பணிகள் குறித்து முதல்வர் தினந்தோறும் கேட்கிறார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Summary

Minister C.T.R. Nirmalkumar has given a clarification regarding the power outages occurring in a few places across Tamil Nadu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.