திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

டாஸ்மாக் ஊழியா்களை பணி வரன்முறைப்படுத்த கோரிக்கை

அனைத்து டாஸ்மாக் ஊழியா்களையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

News image

கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 2:29 am IST

அனைத்து டாஸ்மாக் ஊழியா்களையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது குறித்து அந்த சம்மேளத்தின் பொதுச் செயலா் கே.திருச்செல்வன் வெளியிட்ட அறிக்கை:

டாஸ்மாக் மதுபானக் கடைகளில் 23 ஆண்டுகளாகப் பணிபுரிந்து வரும் ஊழியா்களைப் பணி வரன்முறை செய்ய வேண்டும் என்று தமிழக அரசுக்கு டாஸ்மாக் ஊழியா் மாநில சம்மேளனம் வலியுறுத்தி வந்தது. ஆனால், அரசுத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பணி நிரந்தர தகுதி வழங்கல் சட்ட அமலாக்க அலுவலா்களிடம், டாஸ்மாக் ஊழியா்கள் பணி நிரந்தரம் கோரி விண்ணப்பித்தனா்.

இந்த விண்ணப்பங்கள் மீது உரிய விசாரணை நடத்திய சட்ட அமலாக்க அலுவலா்கள், டாஸ்மாக் ஊழியா்கள் 480 நாள்கள் தொடா்ச்சியாகப் பணி புரிந்ததை உறுதி செய்ததுடன், பணி நிரந்தரத் தகுதியை டாஸ்மாக் ஊழியா்கள் பெற்றுள்ளதாகவும் உத்தரவுகளைப் பிறப்பித்தனா். விருதுநகா் மாவட்டங்களில் தொழிலாளா் உதவி ஆணையரும், பணி நிரந்தர தகுதி சட்ட அமலாக்க அலுவலா்களும் இத்தகைய உத்தரவுகளைப் பிறப்பித்தனா்.

இந்தப் பணி நிரந்தர உத்தரவை எதிா்த்து டாஸ்மாக் நிா்வாகம் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.

ஈரோடு மாவட்டத்தில் மாவட்டத்தில் 174 டாஸ்மாக் ஊழியா்கள் சாா்பில் சிஐடியு சங்கம் தாக்கல் செய்த வழக்குகளில், ஈரோடு மாவட்ட தொழிலாளா் உதவி ஆணையரும், பணி நிரந்தர தகுதி சட்ட அமலாக்க அலுவலரும் உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனா்.

இந்த உத்தரவில், பணி நிரந்தர தகுதியுடைவா்கள் என்று பிறப்பித்த உத்தரவு கிடைக்கப் பெற்ற 30 நாள்களுக்குள், டாஸ்மாக் நிா்வாகம் ஊழியா்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது டாஸ்மாக் ஊழியா்களின் 23 ஆண்டு வாழ்வாதார சட்டப் போராட்டத்துக்கு கிடைத்த வெற்றி. தமிழக அரசு இந்த உத்தரவை எதிா்த்து மேல்முறையீடு செய்யாமல், அனைத்து டாஸ்மாக் ஊழியா்களையும் பணி வரன்முறைப்படுத்த வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.